வாருங்கள் சித்திரை புதுவருடத்தை கொண்டாடுவோம்… எமது இனத்தை அழித்த ஆரியர்களின் புதுவருடமாக…… இரா.துரைரத்தினம்
இந்த தலைப்பை பார்த்ததும் சித்திரை புதுவருடத்தை கொண்டாட வேண்டாம் என சொல்லப்போகிறாரோ என உங்களில் சிலர் முகத்தை சுழித்துக்கொள்ளலாம். சித்திரை புதுவருடத்தை தமிழர்கள் கொண்டாடக்கூடாது என்று நான் வாதம் புரியவரவில்லை.
உங்களில் பலரைப்போல சிறுவனாக இருந்த காலத்தில் சித்திரை புதுவருடம் வருகிறது என்றால் ஒருவாரத்திற்கு முன்பே மகிழ்ச்சியில் திளைத்ததும் தமிழர்களின் வழிபாட்டு முறையின் தோற்றம் அறிந்து கொண்ட பின் பழக்கப்பட்டு அதிலிருந்து விடுபடமுடியாத சராசரி மனிதனாக சித்திரை புதுவருடத்தையும் கொண்டாடி வருபவர்களில் நானும் ஒருவன்தான்.
ஆனால் சித்திரைப் பிறப்புத்தான் தமிழர்களின் புதுவருடம் என சிலர் வாதிடுவதைதான் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. ஜனவரி முதலாம் திகதியை புதுவருடம் என சைவக்கோவில்களில் பூசை வழிபாடு நடைபெறுகிறதோ அதே போலத்தான் பழக்கப்பட்டதன் காரணமாக அல்லது ஆரியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதன் காரணமாக சித்திரை புதுவருடத்தையும் கொண்டாடுவதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறோம்.
சித்திரை புதுவருடம் தமிழர்களுக்குரியதல்ல என்றால் தமிழர்கள் ஏன் அதை கொண்டாடி வருகிறார்கள்.. எமது பாட்டன் பூட்டன் காலத்திலிருந்தே சித்திரை வருடப்பிறப்பு என்று தானே கொண்டாடி வருகிறோம் என உங்களில் பலர் வாதிடலாம். உண்மைதான். ஆனால் எங்கள் வழிபாட்டு முறைகளும் பழக்க வழக்கங்களும் திட்டமிட்ட முறையில் எம்மை ஆதிக்கம் செய்தவர்களால் மாற்றப்பட்டிருக்கிறது என்ற வரலாறு எமக்கு போதிக்கப்படாது மறைக்கப்பட்டே வந்திருக்கிறது.
சித்திரை மாதம் முதலாம் திகதி இந்து சிங்கள புத்தாண்டு என்பது சரியானதுதான். இந்துக்களும் சிங்களவர்களும் கொண்டாட வேண்டிய புதுவருடத்தை திராவிடர்களான தமிழர்களும் சைவ மதத்தவர்களும் கொண்டாடுவதுதான் மடமையான விடயம்.
சித்திரைப் பிறப்பை ஆரியர்களான சிங்களவர்களும் வடஇந்தியர்களும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். வடஇந்திய மன்னனான வாலிசமன்னன் முடிசூடிய தினத்தை வருடப்பிறப்பு என்று கொண்டாடி மகிழ்ந்தாகவும் ஒரு வரலாறு உண்டு.
ஆரிய கடவுளர்களை வழிபடும் பழக்கம் எம்மீது திணிக்கப்பட்ட பின்னர் சித்திரை புதுவருடக் கொண்டாட்டங்களும் எம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது.
பல்லவர்காலத்தில் (9ஆம் நூற்றாண்டு) ஆரிய சமய கடவுளர்களுக்கும் திராவிட கடவுளர்களுக்கும் இடையில் ஒரு சமரசம் ஏற்படுகிறது. சமரசம் என்பதை விட ஆரிய பிராமணிய திணிப்பு ஒன்று தமிழர்கள் மீது சுமத்தப்படுகிறது.
இயற்கை தெய்வ வழிபாட்டு முறையை கொண்டிருந்த தமிழர்கள் மீது ஆகமமுறையான வழிபாட்டு முறையும் சிவன் கணபதி போன்ற ஆரிய தெய்வங்களை தமிழர்களின் கடவுளராக கருதப்படும் முருகனுக்கும் உறவுமுறை தொடர்பை பல்லவர்கால புராணங்களில் சித்தரிக்கப்படுவதையும் காண்கிறோம்.
பல்லவர்காலத்தில் சமரசம் என்ற போர்வையில் புனையப்பட்ட இந்த புராணங்களில் கூட தமிழ் கடவுளான முருகன் ஆரியக்கடவுளரான சிவன் கணபதிக்கு தந்தை தனையனாகவே கூறப்படுகிறது. அங்கு கூட தமிழர்களின் கடவுளை தம்பி என்ற நிலையில் வைத்துதான் அவர்களால் பார்க்க முடிகிறது. சமனாக பார்க்கவில்லை. ஆகம வழிபாட்டு முறையில் முருகன் ஆலயத்தில் கூட ஆரிய கடவுளான கணபதிக்கே முதல் பூசை செய்யப்பட வேண்டும் கணபதியை வழிபட்டே எந்த காரியத்தையும் செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது. ஆகம வழிபாட்டு முறையில் தமிழ் கடவுளான முருகனை வழிபட்டு காரியங்களை செய்ய வேண்டும் என சொல்லவில்லை. பெண்களின் கழுத்தில் கட்டப்படும் தாலியில் கூட கணபதியின் உருவமே பொறிக்கப்படுகிறது. ஆகமவழிபாட்டு முறையில் தமிழ் கடவுள் என கருதப்படும் முருகனுக்கு முதலிடம் வழங்கப்படுவதில்லை.
ஆரியர்களின் வருகைக்கு முன்னர் தமிழர்கள் தை முதலாம் திகதியையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். இயற்கை தெய்வ வழிபாட்டு முறையை கொண்ட தமிழர்கள் தாம் வணங்கி வந்த தெய்வங்களில் ஒன்றான சூரிய பகவானுக்கு புதுவருடம் பிறக்கும் போது பொங்கல் இட்டு வழிபட்டு வந்த வரலாறு சிந்துவெளி குமரிநாடு ஈழம் என பரந்து வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் இருந்து வந்திருக்கிறது. சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாக பின்பற்றி வந்துள்ளனர் என்று வரலாறு கூறுகிறது.
வரலாற்றப்பதிவுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தமிழர்கள் தை முதலாம் திகதியை தமது புத்தாண்டாக கொண்டாடி வந்த போதிலும் சீனர்கள் வெள்ளையர்கள் தொடராண்டைக் கொண்டுள்ளது போல் தமிழர்களுக்கும் வரலாற்றுப் பதிவுகளுக்கு தொடர் ஆண்டு அவசியம் என்றுணர்ந்த தமிழ்ச் சான்றோர்கள் 1921 ஆம் ஆண்டில் பச்சையப்பன் பல்கலைக் கழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் மறைமலையடிகளார் தலைமையில் கூடி திருவள்ளுவரின் பிறப்பை உறுதிசெய்து கிறிஸ்துவிற்கு முன் 21ஆண்டுகளில் திருவள்ளுவர் பிறந்து இருப்பதால் நடைமுறையாண்டுடன் கூட்டி பெறும் ஆண்டு தமிழாண்டு என்று வரையறை செய்தனர்.
இதை 1976 முதல் தமிழக அரச நாட்காட்டிகளிலும் இடம்பெறச்செய்தனர். தை முதலாம் திகதியே தமிழ் புத்தாண்டாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் விடுத்து வந்த தொடர்ச்சியான கோரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு 2.2.2009 இல் தமிழ் தைப்பிறப்பே தமிழ்ப்புத்தாண்டு என்று சட்டமாக்கியது. கோவில்களிலும் வழிபாடு நிகழ்த்த முடியும் என்ற சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.
வியாபாரத்திற்காக வடஇந்தியாவில் குடியேறிய பாரசீகர்களின் பண்பாட்டையும் வழிபாட்டு முறைகளையும் தமிழர்கள் முறையானது என்றும் அதுவே ஒழுக்கம் நிறைந்தது என்றும் பின்பற்றி வருவதுதான் வேதனையான விடயம்.
ஆரியர்கள் தமிழர்களை மிகதரக்குறைவாக புராணங்களிலும் இதிகாசங்களிலும் கதைகளை புனைந்த போது அதையே தலைமேல் கொண்டு ஒழுகி வருகின்றனர். ஆரியர்கள் திராவிட மன்னான சூரனை அழித்த தினத்தை தீபாவளியாக கொண்டாடி வருவதை திராவிடர்களும் பின்பற்றி தம்மை அழித்த தினத்தை கொண்டாடி வரும் அப்பாவி இனம் தமிழர்களை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நம்மை இறுகப்பற்றிக்கொண்ட மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று.
சிலர் இதை தெரியாமல் கொண்டாடி வருகின்றனர். பலர் இந்த வரலாற்றை தெரிந்து கொண்ட பின்பும் வழக்கத்தை எவ்வாறு மாற்றுவது என்ற தயக்கத்தில் உள்ளனர்.
தமிழர்கள் சைவவழிபாட்டை விட்டு இந்துவழிபாட்டிற்கு செல்ல ஆரியர்களின் சூழ்ச்சியே காரணம் . இயற்கை தெய்வ வழிபாட்டு முறைகளை கொண்ட சைவர்களான தமிழர்களை வைஸ்ணவ நாயன்மார்களும் வைஸ்ணவ ஆழ்வார்களும் சைவ வழிபாட்டு முறையை ஒழித்து இந்து வழிபாட்டு முறையை தமிழர்கள் மீது திணித்து விட்டனர். தமிழர் பண்பாட்டை அழித்த ஆரியரின் பண்பாட்டை தமது என்று சிதைந்து போன தமிழினம் தலையில்வைத்து கூத்தாடுகின்றது.
வாருங்கள்.. சித்திரை புதுவருடத்தை கொண்டாடுவோம்.. தமிழர்களின் புதுவருடமாக அல்ல… எமது வழிபாடு பண்பாட்டு முறைகளை அழித்த வடஇந்திய ஆரியர்களின் புத்தாண்டாக…எமது இனத்தை அழித்த ஆரிய சிங்களவர்களின் புத்தாண்டாக….
R.Thurairatnam
thurair@hotmail.com
நன்றி :- http://www.tamilwin.com/
Wednesday, April 14, 2010
Friday, April 9, 2010
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி
தமிழ் மொழி
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி என்ற பெருமைக்கு உரிய நம் தமிழ் மொழிக்கு எந்த அபாயமும் வராது என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.....
ஆனாலும் கடந்த 3 தலைமுறைகளில் மட்டும் சுமார் 200 மொழிகள் மறைந்துவிட்டன....
இல்லை இல்லை அழிந்துவிட்டன....
மேலும் அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுவதில் நமது இளைய தலைமுறை அதிக ஆர்வம் காட்டி வருவது கவலை அளிக்கிறது.....
இந்த நிலை நீடித்தால் "மெல்லத் தமிழ் இனி சாகும்" என்ற பாரதியின் கூற்று உண்மையாகிவிடும்.
எனவே நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை பாதுகாப்பது மட்டுமின்றி.... அதனை மேலும் வளர்க்க பாடுபடுவது என்று....
உலக தாய்மொழி தினமாகிய மாசி மாதம் 21ம் திகதியிலிருந்து உறுதியேற்போம்.....
தமிழுக்கு அமுதென்று பெயர் - இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நிகர்..
வாழ்க தமிழ்..... வளர்க அதன் புகழ்.....

Thirumuruga Kirupananda Variyar
Thirumuruga Kirupananda Variyar
ST. ARUNAGIRINATHAR flourished during a period when religious minded people were quarrelling among themselves regarding the supremacy of their personal Gods like Siva and Vishnu, the grandeur of their religion like Saivism and Vaishnavism and the greatness of the religious scriptures and the languages in which they have been composed like Sanskrit and Tamil.
To alleviate such apparent contradictions and to infuse new vigour into the understanding of the Puranic lore, religious dogmas, ritualistic elements, philosophical doctrines and spiritual expositions, the saint composed many devotional hymns especially attributed to highlight the grace of Lord Muruga, his personal and propitious deity, through his mellifluous and unique styles of composition with "santham" and "virutham" as the melodies endeavoured to reconcile these peripheral differences among the devotees.
As he got enlightenment at the Tiruvannamalai Siva temple by the grace of Lord Murugan, it was but natural for him to incorporate these two major Gods in the Hindu pantheon wherever possible as father and son. Similarly Saivism and Vaishnavism received equal treatment from the saint since he has hailed Muruga as the son-in-law of Mahavishnu at various places.
In his Tiruppugazh, Kandaralankaram, Kandaranubhuti, Vel Virutham and Mayil Virutham, the saint had copiously used Sanskrit terms in Tamil alphabets to describe the glory of Lord Muruga to show that language is a prelude to experience and not to proclaim its inferior or superior nature.
Thirumuruga Kirupananda Variyar has done yeoman service to Hindu faith by way of popularising its religious doctrines and philosophical ideologies. He had undertaken the arduous task of commenting upon the works of Saint Arunagirinathar in his own unique style so that even a common man can study them.
Through his excellent elucidations, elegant expressions, humorous illustrations, apt analogies, appropriate allegories, thought provoking statements both in writing and oratory, the scholarly saint had made more complicated texts simple and gave a new orientation to religious discourses. Variar Swamigal has rendered a commendable job of commenting upon the hymns of Thiruppugazh pertaining to Tiruvannamalai and Tirukkalathi temples. He has uniformly given the meaning, general gist of the verse, explanatory notes and essential truths for all the verses. The songs of Arunagirinathar are really difficult to read and tough to comprehend the contents and reflect upon. It is highly remarkable that the commentator has made them understandable in a more lucid way. He also culls out the implicit meanings of the terse verses.
The commitment, dedication and involvement of both the saintly author and the commentator to bring ashore the drowning masses in the whirlpool of worldliness, by invoking the ever-abiding abundant grace of Lord Muruga are revealed throughout this work. All Tamil lovers, especially in the religious moorings, must read this book.

ஆன்மீக சிந்தனைகள்.
ஆன்மீக சிந்தனைகள்.- வள்ளலார்.
சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப்
பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக்
கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.
எந்த விதத்திலும்
உணவில் புலால் சேர்க்கக்கூடாது. எவ்வளவு சுவையுள்ளதாக இருந்தாலும் அளவோடு
உண்பது சிறப்பு. பகலில் சிறிது நேர ஓய்வும் கூட உடலுக்கு மிகவும்
பயனுடையதாகும்.
மாலை வேளையில் கொஞ்ச தூரம் வியர்க்கும்படியாக நடை
பயில வேண்டும். இரவு உணவு பகல் உணவைக் காட்டிலும் குறைவாக இருக்க
வேண்டும். எப்போதும் பயப்படுதல் கூடாது.
கொலை, கோபம், சோம்பல்,
உரத்துப் பேசுதல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவையெல்லாம் அறவே தவிர்க்க
வேண்டியவை. உற்சாகத்தை எப்போதும் இருக்கும்படியான நல்ல மனநிலை வேண்டும்.
உடலுக்கு
உயிர் ஒன்றே. அதுபோல, இவ்வுலகம் முழுமைக்கும் கடவுள் ஒருவரே. தெய்வங்கள்
பல என்று சிந்திப்பது திருவருளைப் பெறாதவர்கள் சொல்வதாகும்.

சிவபுராணம்
சிவபுராணம்
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன
சிவபுராணத்தின் நோக்கம்
முன் செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக உள்ளம் மகிழும் வகையில் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என்னும் பொருள்பட, சிவபுராணம் பாடியதன் காரணத்தை அதன் 19 ஆம், 20 ஆம் அடிகளில் விளக்கியுள்ளார் மாணிக்கவாசகர். சைவசித்தாந்தக் கொள்கைகளின்படி, உயிர்கள் செய்யும் நன்மை, தீமை ஆகிய இரு வினைகளும் அவை மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக அமைவதுடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கும் தடையாக அமைகின்றன. இதனாலேயே, முந்தை வினைகள் அனைத்தும் ஓய இறைவன் அருள் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது சிவபுராணம். இதன் இறுதி அடிகளும், அல்லல் நிறைந்த பிறவியை நீக்கும் வல்லமை பெற்ற திருவடிகளைப் பணிந்து சொல்லப்பட்ட இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்று வலியுறுத்துகின்றன.
சிவபுராணத்தின் அமைப்பு
உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல்.
நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி, முதல் பதினாறு அடிகள் வரை, இறைவனை வாழ்த்துவதாக அமைந்துள்ளன.
பதினேழாவது அடியிலிருந்து இருபது வரை நூலின் நோக்கம் பற்றியும், அதை எழுதுவதற்கு ஆக்கியோனுக்கு உள்ள தகுதியும் கூறப்படுகின்றன.
பின்னர் இறைவனைப் புகழ்ந்து, உயிர் தன்னுடைய குறைகளை இறைவனுக்குத் தெரியப்படுத்தும் அடிகள் வருகின்றன. உயிர், உலகில் பல்வேறு வடிவங்களிற் பிறந்து களைத்துப் போனதைக் கூறுவதாக இருபத்தாறு முதல் முப்பத்தோராவது வரையான ஆறு அடிகள் அமைந்துள்ளன.
இறைவன் திருவடிகளைக் கண்டதில் வீடு பேறு அடைந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் 32 ஆவது அடியைத் தொடர்ந்து மீண்டும் இறைவனின் புகழ் கூறப்படுகின்றது.
50 தொடக்கம் 55 வரையான அடிகள், உயிர், தன்னைச் சுற்றி அமைந்துள்ள மாயையினால் உருவான உடல் பற்றியும், அவ்வுடலின் ஐந்து புலன்களும் தன்னை ஏமாற்றுவதையும் எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.
தொடர்ந்து 83 ஆவது அடிகள் வரை இறைவனின் புகழ் கூறப்பட்டு, 84 ஆம், 85 ஆம் அடிகளில் பல்வேறு வடிவங்களில் இருக்கும் உடம்பினுள் கட்டுப்பட்டிருக்க முடியாமல் இருக்கும் நிலையைக் கூறி உயிர் புலம்புகிறது.
மீண்டும் இறைவனின் புகழ்ச்சியுடன், இந் நூலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் அடையக்கூடிய பயனை இறுதி நான்கு வரிகளில் கூறி நூல் நிறைவு எய்துகிறது.
சிவபுராணத்தில் சைவசித்தாந்தக் கருத்துக்கள்
சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ சமயம் தமிழ் நாட்டில் சைவசித்தாந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இறைவன், உயிர், அதனைப் பீடிக்கும் மலங்கள் ஆகிய மூன்றும் என்றும் நிலைத்திருக்கும் உண்மைகள் என்றுகூறும் சைவ சித்தாந்தம், அவற்றின் இயல்புகள், அவற்றிடையேயான தொடர்புகள் என்பன பற்றிக் கூறி, உயிர்களின் விடுதலையும் இறுதி நோக்கமுமாகிய, இறைவனை அடையும் வழிமுறைகள் பற்றியும் கூறுகிறது.
இறைவனுடைய இயல்புகள், உயிரின் தன்மை, அவற்றை மலங்கள் பீடித்திருத்தல், உயிர்கள் திரும்பத் திரும்பப் பிறக்கவேண்டியிருத்தல், உயிர்களின் விடுதலை, உயிர்களை விடுவிப்பதில் இறைவனின் பங்கு, இறைவன் அருளைப் பெறுவதில் உயிர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்பன தொடர்பாகச் சிவபுராணத்தில் குறிப்புக்கள் வருகின்றன.
இந்து சமயத்தின் ஒரு பிரிவு என்ற வகையில் சைவம் வேதங்களை ஏற்றுக்கொண்டாலும், ஆகமங்கள் எனப்படும் நூல்களே சைவசித்தாந்தத்தின் உயிர்நாடியாக விளங்குபவை.
சிவபுராணம் தொடக்கத்திலேயே இறைவனைப் போற்றும்போது, தானே ஆகமம் ஆகி நின்று உயிர்களுக்கு அருகில் வருபவன் என்ற பொருள்பட ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் என்று கூறுகிறது. இதன் மூலம், உயிர்களின் விடுதலைக்கு ஆகமங்களின் இன்றியமையாமை வற்புறுத்தப்படுகிறது
இறைவன்
சைவ சித்தாந்தம் கூறும் மூன்று உண்மைப் பொருள்களுள் இறைவனும் (பதி) ஒன்று. அவன் அறிவு வடிவமானவனும், எங்கும் நிறைந்திருப்பவனும், எல்லாவல்லமையும் உடையவனும் ஆவான் என்பதும்; படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களை அவன் புரிகிறான் என்பதும் சைவ சித்தாந்த மரபு. இந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பின் வரும் அடிகளில் எடுத்து ஆளப்படுகின்றன.
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய்
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே
அளவிலாப் பெம்மானே
தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய்
உயிரும், மலங்களும்
உயிரும் உண்மைப் பொருளே, அதற்கும் அறிவு உண்டு, ஆனாலும் அதனை இயல்பாகவே பீடித்துள்ள ஆணவ மலத்தினால் அதன் அறிவு முற்றாக மறைக்கப்பட்டுள்ளது என்கிறது சைவ சித்தாந்தம். முற்பிறவியின் வினைப் பயன்கள் கன்மம் என்னும் மலமாகவும், வினைப் பயன்களை நுகர உதவும், உடல் மற்றும் உலகப் பொருட்கள் வடிவில் மாயை என்னும் மலமும் இடையில் வந்து உயிரைப் பீடிக்கின்றன. இக்கருத்துக்கள் சிவபுராணத்தின் பின்வரும் அடிகளிலே காணக் கிடைக்கின்றன.
எஞ்ஞானம் இல்லாதேன்
பொல்லா வினையேன்
வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்
பிறவிச் சுழல்
உயிர்கள் ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் நல்வினை, தீவினைகளின் பயன்களை நுகர்வதற்காக அவை புதிய பிறவிகளை எடுத்துப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. இச் சைவ சித்தாந்தக் கொள்கை சிவபுராணத்தின் அடிகளிலே பொதிந்துள்ளன.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்.
இச் சுழலிலிருந்து நீங்கி விடுதலை பெறுவதற்கு இறைவன் திருவருள் தேவைப்படுகிறது. பிறவிச் சுழலிலிருந்து உயிர்களை மீட்க வல்லவன் இறைவனே என்னும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பல அடிகளிலே காணப்படுகின்றன.
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்.
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்.
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்.
அல்லல் பிறவி அறுப்பானே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நன்றி : தமிழ் விக்கிபீடியா.

Subscribe to:
Posts (Atom)